ஈரோடு ரயில் நிலையப் பகுதிகளில் கஞ்சா கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று ரயில்வே போலீஸ் நிலையம் அருகே கண்டெடுக்கப்பட்ட பையில் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதை கடத்தி வந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ச்சியாக கஞ்சா கடத்தல் சம்பவங்கள் நடப்பதால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.