கர்நாடக மாநிலத்தவரை தாக்கிய இருவர் குண்டர் சட்டத்தில் சிறை

0பார்த்தது
கர்நாடக மாநிலத்தவரை தாக்கிய இருவர் குண்டர் சட்டத்தில் சிறை
ஈரோட்டில், தமிழ்நாடு எழுச்சிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் சிலம்பரசன், கொள்கை பரப்பு செயலாளர் அப்துல் மாலிக் ஆகியோர், கர்நாடக சுற்றுலா வேனை தடுத்து, ஓட்டுநரை தாக்கி, கர்நாடக கொடியை அகற்றி, சமூக வலைதளங்களில் பதிவிட்டு, இரு மாநில மக்களிடையே பகைமையை உண்டாக்கும் வகையில் செயல்பட்டனர். ஈரோடு வடக்கு போலீசார் விசாரணை நடத்தி, இருவரையும் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதன்படி, இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி