ஈரோடு: நாட்டு துப்பாக்கியுடன் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

553பார்த்தது
ஈரோடு: நாட்டு துப்பாக்கியுடன் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக லோகேஸ்வரன் (23) மற்றும் ஜீவானந்தம் (28) ஆகிய இருவரை சித்தோடு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ 400 கிராம் கஞ்சா மற்றும் ஒரு நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. ரகசிய தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வாய்க்கால் அருகே முள்புதரில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி