ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் வீரம் செறிந்த மண்ணில், ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய தீரன் சின்னமலைக்கு, அவரது கோட்டை இருந்த இடத்தில் கம்பீரமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள சிலையை ஒத்த இந்த சிலை அமைக்கும் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதற்கு கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த சிலை திறப்பு விழா ஓடாநிலையில் நடைபெற்றது.