திருப்பூர்: ரேஷன் அட்டைகள் குப்பையில் வீசப்பட்டதால் பரபரப்பு

576பார்த்தது
பல்லடம் அருகே அறிவொளி நகர் பகுதியில் 270க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைகள் குப்பைக் கிடங்கில் வீசப்பட்டிருப்பதால் பரபரப்பு. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அறிவொளி நகர் பகுதியில் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குப்பைக் கிடங்கு உள்ளது. இந்த குப்பைக் கிடங்கில் திருப்பூர் தாராபுரம் சாலை பகுதியில் உள்ள பெருச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த 270க்கும் மேற்பட்ட குடும்பத்தாரின் ரேஷன் அட்டைகள் (ஸ்மார்ட் கார்டுகள்) அறிவொளி நகர் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் அப்பகுதி மக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இத்துடன் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பப் படிவங்கள், நியாயவிலை கடையில் பணியாற்றும் நபர்களின் விடுப்புக் கடிதங்கள் போன்றவைகளும் வீசப்பட்டுள்ளன. குப்பைக் கிடங்கில் வீசப்பட்டுள்ள ரேஷன் அட்டைகள் காலாவதியானவையா அல்லது பொதுமக்களுக்கு புதிதாக வழங்குவதற்காக அச்சிடப்பட்டவையா என்பது குறித்து விசாரிக்க பல்லடம் வட்டாட்சியர் ஜீவா உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் குப்பைக் கிடங்கில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களின் அரசு அங்கீகாரமாகக் கருதப்படும் ரேஷன் கார்டுகள் குப்பைத்தொட்டியில் கிடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி