முயல் வேட்டையாடிய நபருக்கு 25 ஆயிரம் அபதாரம்

0பார்த்தது
முயல் வேட்டையாடிய நபருக்கு 25 ஆயிரம் அபதாரம்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேருந்து நிலையத்தில் சாக்குப்பையுடன் நின்ற இருவரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் சேலம் மாவட்டம் சங்ககிரி வேலம்பட்டி பகுதியைச் சேர்ந்த சரவணன் (34) மற்றும் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பச்சமுத்து (28) என்பதும், நல்லாம்பட்டி பகுதியில் முயல் வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவருக்கும் தலா ரூ.12,500 வீதம் மொத்தம் ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.