ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சுள்ளிபாளையத்தில் கூலித்தொழிலாளி பரமேஸ்வரன் வீட்டில், துணிகர கொள்ளை நடந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, முன்புற கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.