ஈரோட்டில் கேட்பாரற்று கிடந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்

826பார்த்தது
ஈரோட்டில் கேட்பாரற்று கிடந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்
வடமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் ஈரோட்டிற்கு கஞ்சா கடத்தல் அதிகரித்துள்ள நிலையில், மாவட்ட எஸ்.பி. சுஜாதாவின் அறிவுறுத்தலின் பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் ஈரோடு ரயில் நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கேட்பாரற்று கிடந்த சாக்குப் பையில் இருந்து 6 கிலோ கஞ்சாவை டவுன் மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, யார் கொண்டு வந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி