ஈரோட்டில் 2 கடைகளில் பணம் கொள்ளை மர்ம நபர் கைவரிசை

54பார்த்தது
ஈரோட்டில் 2 கடைகளில் பணம் கொள்ளை மர்ம நபர் கைவரிசை
ஈரோட்டில் அடுத்தடுத்து 2 கடைகளில் பணம் கொள்ளை முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் கைவரிசை 

ஈரோடு மூலப்பாளையத்தில் தர்மசிவன் என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல் மற்றும் சிமெண்ட் விற்பனை கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர். இன்று காலை மீண்டும் கடையை திறக்க வந்தபோது பொருட்கள் சிதறி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ. 20 ஆயிரம் மற்றும் சில ஆவணங்கள் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது நள்ளிரவில் கடையின் பின்புறம் வழியாக வந்த முகமூடி அணிந்த நபர் கைவரிசை காட்டியது தெரிய வந்துள்ளது. 

இதேபோல பக்கத்தில் இருந்த நவீன சலவைக கத்தில் பின்புறம் வழியாக வந்த அதே முகமூடி அணிந்த நபர் ரூ. 5 ஆயிரம் மற்றும் 20 பட்டுப்புடைவைகளையும் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இரு துணிகர கொள்ளை சம்பவங்கள் குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி தடயங்களை கண்டறிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.