ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஜெயக்குமார் எம்எல்ஏ, தனது பதவியை நேற்று முன்தினம் (மே 25) ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து அவர் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுகவினர் நேற்று (மே 26) பெருந்துறையில் ஜெயக்குமாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.