​பெருந்துறை அருகே பேருந்துகள் மோதி விபத்து:

1பார்த்தது
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதியதில் 7 பயணிகள் காயமடைந்தனர். கோவையிலிருந்து ஈரோடு நோக்கிச் சென்ற அரசு பேருந்தின் மீது, திருப்பூரிலிருந்து வந்த தனியார் பேருந்து அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. காயமடைந்த 7 பயணிகள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் பேருந்துகளுக்கு இடையேயான போட்டி வேகமே விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி