ஈரோடு: இயந்திரத்தை திருடி கொலை மிரட்டல்: நால்வர் மீது வழக்கு

2பார்த்தது
ஈரோடு: இயந்திரத்தை திருடி கொலை மிரட்டல்: நால்வர் மீது வழக்கு
ஹைதராபாத்தை சேர்ந்த ஹரிஷ் குப்தா (64) என்பவர், ஈரோடு மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது தொழிற்சாலையில் இருந்த 2 கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களை வாடகைக்கு எடுத்த சேகர், செல்வராஜ், புகழேந்தி ஆகியோர் 1.75 கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களை திருப்பி தராமல், கொலை மிரட்டல் விடுத்து மோசடி செய்ததாக தெரிவித்துள்ளார். வாடகையும், முன்பணத்தையும் செலுத்தாமல் இயந்திரத்தை விற்று மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் மொடக்குறிச்சி போலீசார் நால்வர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி