சிவகிரி இரட்டை கொலை விவகாரம்.. சந்தேக வளையத்தில் 54 பேர்

81பார்த்தது
சிவகிரி இரட்டை கொலை விவகாரம்.. சந்தேக வளையத்தில் 54 பேர்
சிவகிரி அருகே 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் தேவையான இடங்கள் கண்டறியப்பட்டு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இது தவிர 6 இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து சென்று வருகின்றனர். 

சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் இதுவரை சிவகிரி பகுதியில் 54 சந்தேக நபர்கள் பிடிக்கப்பட்டு அவர்களின் கைரேகை எடுக்கப்பட்டு கைரேகை பிரிவினரால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வெளி நபர்கள் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்தால் அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி