ஈரோடு: டீக்கடையில் தீ விபத்து

61பார்த்தது
ஈரோடு: டீக்கடையில் தீ விபத்து
ஈரோடு என். எம். எஸ். காம்பவுண்டு பகுதியில் ராம் என்பவர் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த டீக்கடையில் நேற்று மாலை ராம் வழக்கம் போல் டீ போடுவதற்காக பாலை சுடவைத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அடுப்பில் இருந்து மெளமெளவென தீ பற்றி எரிய தொடங்கியது. பொதுமக்கள் குடத்தில் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றும், தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கியாஸ் சிலிண்டரிலும் தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. உடனடியாக ஈரமான சாக்குகளை போட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து தீப்பிடித்த கியாஸ் சிலிண்டரை தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக வெளியே கொண்டுவந்தனர். குடியிருப்புகள் அதிகமான இடத்தில் உள்ள டீக்கடையில் தீ பற்றிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி