பெருந்துறை: அமைதிப்பூங்கா அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம்

65பார்த்தது
பெருந்துறை: அமைதிப்பூங்கா அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம்
பெருந்துறை அமைதிப்பூங்கா அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம் பெருந்துறை அமைதிப்பூங்கா அறக்கட்டளையின் 9-வது பொதுக்குழு கூட்டம் அலுவலக அரங்கில் அறக்கட்டளையின் தலைவர் . சென்னியப்பன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் இன்ப்ரா டெக்ஸ் சக்திவேல், இணைச் செயலாளர் அக்னி ஸ்டீல்ஸ்  சின்னசாமி, சக்தி மசாலா சாந்தி துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பொருளாளர் வி. வி. நேசனல்  செந்தில் முருகன் 2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். செயலாளர் சேப்டி திரு. சி. சௌந்தரராஜன் ஆண்டறிக்கையுடன் செயலர் அறிக்கையையும் வாசித்தார். 

அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர், ஈரோடு சக்தி மசாலா நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் துரைசாமி சிறப்புரை நிகழ்த்தினார். ஈரோடு  அரிமா. கல்யாணசுந்தரம் டயாலிசிஸ் சிகிச்சை குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.