ஈரோடு: கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி

85பார்த்தது
ஈரோடு: கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி
மத்திய அரசு நாட்டில் பதற்றமான அரசியலை ஏற்படுத்த முயற்சிக்கிறது. மத்திய அரசு தமிழ்நாடு, தமிழ்நாடு மக்கள், தமிழ்நாடு அரசின் மீது அரசியல் யுத்தத்தை மேற்கொண்டுள்ளது. மத்திய அரசு தங்களின் ஆர்எஸ்எஸ் கொள்கையை கட்டாயம் அனைத்து மாநிலங்களிலும் ஏற்க வேண்டும் என நிர்பந்தம் செய்கிறது. 

மத்திய அரசு வகுப்புவாத கொள்கையை பின்பற்றுகிறது. ரயில்வேயில் நீண்ட தூர ரயில் பயணத்தில் உணவு பதிவில் சைவ/அசைவ உணவா என்ற இடத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவன் என கேட்கப்படுகிறது. நாடு முழுவதும் மத்திய அரசு பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. மத்திய அரசின் கொள்கையை ஏற்க மறுக்கும் மாநிலங்களில் எதுவாக இருந்தாலும் நிர்பந்தம் செய்வது ஏற்கமுடியாது. இது தேவையற்ற பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. 

தேசிய அளவில் கல்விக்கொள்கையில் மொழி பிரச்சினை மட்டுமில்லாமல் தமிழக மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். மூன்று, ஐந்து, எட்டு, பத்து, பன்னிரண்டு ஆகிய வகுப்புகளின் பொதுத்தேர்வு உள்ளது தான் பிரச்சினை உள்ளது. இதனால் பலர் கல்வியை பாதியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. எந்தெந்த மாநிலங்களில் மும்மொழி பின்பற்றப்படுகிறது என்பது குறித்து மத்திய அரசு பகிரங்கமாக வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்.

தொடர்புடைய செய்தி