மினி அத்திக்கடவு பணி துவக்கம்

672பார்த்தது
மினி அத்திக்கடவு பணி துவக்கம்
பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. ஜே.கே.எஸ். ஜெயக்குமார், நிச்சாம்பாளையம் ஊராட்சி கொட்டையன் கருக்குத்தோட்டம் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, வறண்டு கிடக்கும் நான்கு குட்டைகளுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாலா கோயில் உபரி நீரை கொண்டு வர தனது சொந்த நிதியில் இருந்து உயர்தர மோட்டார் மற்றும் குழாய்களை வாங்கிக் கொடுத்துள்ளார். அரசு நிதிக்காக காத்திருக்காமல், மக்களின் துயரம் தீர்க்க அவர் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையால், குழாய்கள் பதிக்கப்பட்டு நேற்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. தண்ணீர் குட்டையை நிரப்பியதைக் கண்ட விவசாயிகள் மற்றும் தாய்மார்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இது ஒரு 'மினி அத்திக்கடவு - அவினாசி திட்டம்' போல அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி