ஈரோடு: கஞ்சா விற்பனை செய்த வட மாநில தொழிலாளர் கைது

894பார்த்தது
ஈரோடு: கஞ்சா விற்பனை செய்த வட மாநில தொழிலாளர் கைது
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வண்டிபேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் சென்னிமலை தனிப்பிரிவு போலீசார் அப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் போது, வட மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் டெப் லாக் (44) என்பவர் 300 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ. 7500-ம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, போலீசார் ராஜேஷ் டெப் லாக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி