பெருந்துறை: கார் சாலை தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்ததால் பரபரப்பு

59பார்த்தது
பெருந்துறை: கார் சாலை தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்ததால் பரபரப்பு
ஈரோடு ஆசிரியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வனஜா. ஈரோடு பெருந்துறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று வழக்கம் போல் தனக்கு சொந்தமான காரில் வீட்டில் இருந்து கல்லூரியை நோக்கி தனது சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது பெருந்துறை சாலை வேப்பம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது கார் சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனில் (தடுப்பு சுவரில்) பயங்கரமாக மோதி 100 அடி தூரத்திற்கு தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இருப்பினும் காருக்குள் இருந்த ஏர்பேக் உடனடியாக திறக்கப்பட்டதால் காரில் பயணித்த பேராசிரியை வனஜா தலையில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து காரணமாக பெருந்துறை சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் இந்த விபத்து தொடர்பான சி.சி.டி.வி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி சிறிது தூரம் சாலையில் இழுத்து வரும் காட்சிகள் பதைபதைக்க வைக்கிறது. இந்த விபத்து குறித்து தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி