விஜயமங்கலம், பெரியவீரசங்கிலியைச் சேர்ந்த ராமசாமி (58) மற்றும் குன்னூரைச் சேர்ந்த ஜெயக்குமார் (65) ஆகியோர் கடந்த 7-ஆம் தேதி இரவு, விஜயமங்கலம்-ஊத்துக்குளி சாலையில் மது அருந்திக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெயக்குமார், கிரைண்டர் கல்லால் தாக்கியதில் பலத்த காயமடைந்த ராமசாமி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார். பெருந்துறை போலீஸார் ஜெயக்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.