ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்த வட மாநிலங்களைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் மூலம் அங்கு கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் காணப்படுகிறது. பனிக்கம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இருவரைச் சோதனை செய்ததில் 600 கிராம் கஞ்சா பொட்டலங்களாக இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த பீகார் மாநிலம் பாட்னா மண்டலைச் சேர்ந்த பிட்டு குமார், மேற்கு வங்க மாநிலம் பர்த்வானகர் பகுதியைச் சேர்ந்த ஜாகீர் ஆகிய இருவரை பெருந்துறை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.