போலீஸ் அதிகாரிகளுக்கு எஸ். பி. சுஜாதா பாராட்டு

2பார்த்தது
போலீஸ் அதிகாரிகளுக்கு எஸ். பி. சுஜாதா பாராட்டு
ஈரோடு மாவட்டம் கோண வாய்க்கால் சேலம் - கோவை பைபாஸ் பாலத்திற்கு அடியில் கடந்த மாதம் 16ஆம் தேதி பெற்றோருடன் தூங்கிய ஒன்றரை வயது குழந்தை வந்தனா கடத்தல் தொடர்பாக, ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில் பவானி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. கடந்த 10-ந் தேதி குழந்தையை பொள்ளாச்சியைச் சேர்ந்த ரமேஷ் கடத்தியது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்ததில், குழந்தை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரமேஷின் உறவுக்கார பெண் ஒருவரிடம் இருப்பது தெரியவந்தது. தனிப்படையினர் நாமக்கல் சென்று குழந்தையை மீட்டனர். ரமேஷ் மற்றும் குழந்தையை வைத்திருந்த உறவுக்கார பெண் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி