சத்தி: மனைவி மாயம்.. கணவர் புகார்

52பார்த்தது
சத்தி: மனைவி மாயம்.. கணவர் புகார்
சத்தியமங்கலம் அடுத்த புதுக்கொத்துக்காடு குப்பன் வீதியைச் சேர்ந்தவர் செல்வன். இவரது மனைவி அம்சவேணி (37). இத்தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அம்சவேணி அப்பகுதியில் இருக்கும் முத்துபாண்டி என்பவருடன் தகாத உறவில் இருப்பதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் செல்வன் மற்றும் அவரது உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில், வீட்டில் வைத்திருந்த ரூ. 50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு, அம்சவேணி வீட்டை விட்டு சென்றுள்ளார். அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து செல்வன் அளித்த புகாரின் பேரில், கடத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி