ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள திருவேங்கடம்பாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சுந்தராம்பாள் (வயது 51). இவர் ஆப்பக்கூடலில் உள்ள சக்தி சர்க்கரை ஆலையில் வரவு-செலவுகளை கண்காணிக்கும் வகையில் அரசு வருவாய் துறையின் மூலம் நியமிக்கப்பட்ட துணை தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், கடந்த 2022ம் ஆண்டு பெருந்துறையில் பணியாற்றியபோது, சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர்
வாரிசு சான்றிதழில் திருத்தம் மேற்கொள்வதற்காக அவரை அணுகியுள்ளார். அப்போது, கார்த்திகேயன் தான் காவல் துணை கண்காணிப்பாளராக உள்ளதாக தெரிவித்து, சுந்தராம்பாளின் கைப்பேசி எண்ணைப் பெற்றுள்ளார். இதையடுத்து, கடந்த 2023ம் ஆண்டு சுந்தராம்பாள் நம்பியூரில் பணியாற்றியபோது, வருமான வரித்துறையில்
வேலை இருப்பதாகவும், அதனை தங்களது மகன் சண்முகராஜூக்கு வாங்கித் தருவதாகவும் கூறி சுந்தராம்பாளிடம் இருந்து கார்த்திகேயன் பணம் கேட்டுள்ளார்.