ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவுந்தப்பாடி புதூர் பகுதியில், தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சால்வைகள் அணிவித்து உற்சாகமாக வரவேற்றார். இந்நிகழ்வில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.