மயிலாடுதுறை மாவட்டம் தர்மத்தனபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உமா ஈஸ்வரி (வயது 29). இவர் தனது குடும்பத்துடன் எர்ணாகுளத்தில் இருந்து திருவாரூருக்கு காரைக்கால் விரைவு ரயிலில் பயணம் செய்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி அதிகாலை ரயிலானது, தொட்டிப்பாளையம் ரயில் நிலையம் அருகே வரும்போது மர்ம நபர் ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த 1½ சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து, ஈரோடு இருப்புப் பாதை காவல் நிலையத்தில் உமா ஈஸ்வரி புகார் அளித்தார்.
இதேபோல் , தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரூபினி (வயது 25). இவர் தனது குடும்பத்துடன் பட்டுகோட்டையில் இருந்து திருப்பூருக்கு கோயமுத்தூர் விரைவு ரயிலில் பயணம் செய்தார். ரயில் கடந்த 13ம் தேதி இரவு 20. 15 மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்தை தாண்டி மெதுவாக சென்றுக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரூபினி கழுத்தில் அனிந்திருந்த 4 சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு வண்டியில் இருந்து குதித்து ஓடியுள்ளார். பின்னர், ஈரோடு இருப்புப் பாதை காவல் நிலையத்தில் ரூபினி புகார் அளித்தார்.
இவ்விரு சம்பவங்களில் தொடர்புடைய பெருந்துறையைச் சேர்ந்த கார்த்திக் ராகேஷ் என்பவரை ஈரோடு ரயில் நிலைய பூங்கா அருகே கைது செய்து, அவரிடம் இருந்து 3 சவரன் நகையை மீட்டனர்.