பெருந்துறையை அடுத்த வேப்பம்பாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நைஜீரியாவைச் சேர்ந்த உடோபி மைக்கேல் (43), சிபுஜோ (44) மற்றும் கானா நாட்டைச் சேர்ந்த மிராக்கிள் (17) என்ற சிறுமி சட்டவிரோதமாக தங்கியிருந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. இதில், உடோபி மைக்கேல் மற்றும் சிபுஜோ ஆகியோர் விசா முடிந்தும் சட்டவிரோதமாக தங்கியிருந்ததுடன், திருப்பூரில் துணி ஏற்றுமதி தொழில் செய்து வந்துள்ளனர். பெங்களூரில் இருந்து வந்த மிராக்கிள் முறையான அனுமதியுடன் தங்கியிருந்தார். மூவரும் விசாரணைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.