சென்னிமலை அருகே முருங்கதொழுவு கிராம நிர்வாக அலுவலர் அருள்குமரனுக்கு, லாரிகள் மூலம் கிராவல் மண் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அம்மாபாளையம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, நிறுத்த முயன்ற டிப்பர் லாரி நிற்காமல் சென்றது. பெட்ரோல் பங்கில் நிறுத்தப்பட்ட லாரியை ஓட்டுநர் விட்டு தப்பியோட, கிராம நிர்வாக அலுவலர் லாரியை பறிமுதல் செய்து ஆய்வு செய்தார். அனுமதியின்றி 3 யூனிட் கிராவல் மண் கடத்தி வந்ததை கண்டறிந்து, சென்னிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான லாரி என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.