மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி

3பார்த்தது
மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி
பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த மதுமிதா (21) நேற்று காலை குளிப்பதற்காக பாத்ரூமில் வைத்திருந்த வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் தாக்கி மயக்கமடைந்து விழுந்தார். உறவினர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மதுமிதாவின் தாய் சுந்தரேஸ்வரி, தனது மகளுக்கும் கணவர் கவுதமிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும், எனவே மதுமிதாவின் மரணம் குறித்து தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெருந்துறை போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி