சென்னிமலை அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

2பார்த்தது
சென்னிமலை அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த ஒட்டப்பாறையைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி பூபதிராஜா (20), மதுப்பழக்கத்தால் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், மதுபோதையில் இருந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி