திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த யோகநாதன், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உறவினரைப் பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மேட்டுப்புதூர் ஊராட்சிப் பகுதியில் பாலம் கட்டும் பணியின்போது, முறையான தடுப்புகள் இல்லாததால் தோண்டப்பட்ட குழியில் யோகநாதன் மோட்டார் சைக்கிளுடன் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதி வாகன ஓட்டிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யோகநாதன் உயிரிழந்தார். பள்ளத்தைச் சுற்றி தடுப்புகள் அமைத்திருந்தால் விபத்து தவிர்த்திருக்கலாம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.