நெல் வயலில் துத்தநாக சத்து பற்றாக்குறையை

0பார்த்தது
நெல் வயலில் துத்தநாக சத்து பற்றாக்குறையை
ஈரோடு வட்டாரத்தில் நெல் சாகுபடி தீவிரமடைந்துள்ளது. நெற்பயிரின் வளர்ச்சிக்கு தழை, மணி, சாம்பல், இரும்பு, துத்தநாகம், காப்பர், மாங்கனீஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் அவசியம். நடவு செய்த வயலில் ஜிங்க் சல்பேட் பற்றாக்குறையால் பயிர் வளர்ச்சி குன்றி, தூர்கட்டுதல் குறைந்து, இளம் தளிர்கள் மஞ்சளாக மாறும். இதை நிவர்த்தி செய்ய, விவசாயிகள் நெற்பயிர் நடவுக்கு முன் ஏக்கருக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட்டை 20 கிலோ மணலுடன் கலந்து இட வேண்டும். களர் நிலங்களில் ஏக்கருக்கு 16 கிலோ ஜிங்க் சல்பேட் பயன்படுத்தலாம். நட்ட 30-40 நாட்களுக்குள் மீண்டும் ஒருமுறை இடுவதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம். ஜிங்க் சல்பேட், பயிர் தழைச்சத்தை உறிஞ்சவும், பிற சத்துக்களை பயன்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவும் உதவுகிறது.

தொடர்புடைய செய்தி