
முற்றிலும் புதிய ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்
ஸ்கோடா ஆட்டோ இந்தியா புதிய குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்தி, அதற்கான முன்பதிவுகளை தொடங்கியுள்ளது. 2026 குஷாக் கிளாசிக்+, சிக்னேச்சர், ஸ்போர்ட்லைன், பிரெஸ்டீஜ், மான்டே கார்லோ என 5 வேரியண்ட்களில் கிடைக்கும். 13 வண்ண விருப்பங்களுடன், டூயல்-டோன் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. எலெக்ட்ரிக் சன்ரூஃப், முழு LED விளக்குகள், 6 ஏர்பேக்குகள், 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.







































