தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மறைமுகமாக விசிகவை கூட்டணிக்கு அழைத்திருந்தார். இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணியில் தான் விசிக பயணிக்கும் என திருமாவளவன் திட்டவட்டமாக கூறியுள்ளார். திமுக கூட்டணியில் நீடிப்பதா? வேண்டாமா? என்கிற ஊசலாட்டத்தில் விசிக இல்லை எனவும் இது குறித்த கேள்வியை இனி கேட்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.