ஒரு நாளைக்கு சராசரியாக 2-5 சிகரெட்டுகள் மட்டுமே புகைப்பது கூட இதய நோய் அபாயத்தை 50% அதிகரிப்பதாக PLOS மருத்துவ ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. லேசாக புகைபிடித்தாலும் ஆபத்துதான் என்பதை காட்டும் இந்த ஆய்வு, நீண்ட வருடங்கள் கழித்து புகைபிடிப்பதை விடுவது பாதுகாப்பானது அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. புகைபிடிப்பவர்கள் அதை கைவிட்டாலும், புகைபிடிக்காதவர்களின் ஆரோக்கிய நிலையை அடைய 30 முதல் 40 ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.