தவெக தலைமையின் மறு அறிவிப்பு வெளியாகும் வரை எந்த நிகழ்ச்சியையும் நடத்தக் கூடாது என அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் கூட்ட நெரிசலைத் தொடர்ந்து தேர்தல் பரப்புரை பயணத்தை ஏற்கனவே விஜய் ஒத்திவைத்தார். கரூரில் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு கரூருக்கு பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார்.