மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளார். 11-வது பூத்தின் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்த நிலையில், அதில் பதிவான வாக்குகளை எண்ணாமல் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் கேள்வி எழுப்பிய நிலையில், அவர் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.