உதகைக்கு வருகை தந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு, அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் விவசாய அணி நிர்வாகி வைஷாலி கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டு அவர் கோஷமிட்டதால், அப்பகுதியில் திரண்டிருந்த பாஜக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தியபோது ஏற்பட்ட நெரிசலில் வைஷாலி திடீரென மயக்கமடைந்ததை தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.