அதிக நேரம் மொபைல் திரையை பார்ப்பதால் அதிலிருந்து வெளிவரும் நீல நிற ஒளி கண்களை சோர்வடைய செய்து கடுமையான தலைவலியை உண்டாக்குகிறது. தொடர்ந்து குனிந்த நிலையில் மொபைலை பயன்படுத்துவது கழுத்து தசைகளை பாதித்து 'டெக்ஸ்ட் நெக்' என்ற பாதிப்பையும், அதனால் தலைவலியையும் ஏற்படுத்துகிறது. அவ்வப்போது இடைவெளி எடுப்பதும், கண்களுக்கு பயிற்சி அளிப்பதும் இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்க உதவும் எளிய வழிகளாகும்.