தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி இணைச் செயலாளர் மகேந்திரன், "அதிமுக ஒன்றிணைய வேண்டும்" எனத் தனது கடைசி நிமிட வீடியோவைப் பதிவு செய்துவிட்டு, பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அதிமுக நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பனந்தாளுக்குச் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.