வெடி விபத்து.. 6 பேர் உடல் சிதறி பலி

18பார்த்தது
ஆந்திர மாநிலத்தில், பட்டாசு வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோனசீமா மாவட்டத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலை ஒன்றில் இன்று (அக்.8) திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி