விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்துச்சாமிபுரத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் இன்று (ஜூலை.31) திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆலையில் பணியாற்றி வந்த தொழிலாளி சுப்பிரமணி (55) பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.