ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில், பலரது உடல்கள் 300 மீட்டர் வரை தூக்கி வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் பிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் 9 பேர் உயிரிழந்தனர். வெடிவிபத்து நடத்த காவல்நிலையத்தில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெடிவிபத்து நிகழ்ந்த போது 15 கி.மீ., தூரம் வரை சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.