புதுக்கோட்டை மாவட்டம் டி.அழகாபுரியில் செயல்பட்டு வந்த பட்டாசு குடோனில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். வெடி சத்தம் கேட்டதும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.