அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார். இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். மாணவர்கள் (http://www.tngasa.in) இணையதள முகவரியில் சென்று தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.