தமிழக அரசு ஊழியர்களுக்கு வரும் ஜூன் 1 முதல் பயோமெட்ரிக் மற்றும் முக அடையாள (ஃபேஸ் ஐடி) வருகைப்பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் காலை 10 மணிக்கு முன் பணிக்கு வருவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். ஊழியர்கள் தாமதமாக வருவதைத் தடுத்து, அவர்களின் வருகை நேரத்தைக்
கணினி மூலம் துல்லியமாகக் கண்காணித்து நிர்வாகச் சீர்திருத்தம் செய்ய இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.