5 ஆண்டுகளாக கலப்பட பால் விற்பனை செய்து வந்த ஆலை கண்டுபிடிப்பு

20பார்த்தது
5 ஆண்டுகளாக கலப்பட பால் விற்பனை செய்து வந்த ஆலை கண்டுபிடிப்பு
குஜராத் மாநிலத்தில் 5 ஆண்டுகளாக கலப்பட பால் விற்பனை செய்து வந்த ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் யூரியா, சோப்பு பவுடர், நச்சு ரசாயனம் கலந்து பால் உற்பத்தி செய்தது அம்பலம் ஆகியுள்ளது. இதில், சபர்கந்தா, மெஹ்சனா மாவட்ட மக்கள் 5 ஆண்டுகளாக கலப்பட பால், மோரை உட்கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக நேற்று (பிப்., 06) சபர்கந்தா உள்ளூர் குற்றப்பிரிவு (LCB) ஒரு சிறார் உட்பட ஐந்து பேரை கைது செய்தனர்.