வங்கி விடுமுறை குறித்த போலி சுற்றறிக்கை.. மத்திய அரசு விளக்கம்

10பார்த்தது
வங்கி விடுமுறை குறித்த போலி சுற்றறிக்கை.. மத்திய அரசு விளக்கம்
வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் என்றும், சனி, ஞாயிறு விடுமுறை வழங்கப்படும் என்றும் கூறி ஒரு சுற்றறிக்கை பகிரப்பட்டு வருகிறது. இந்த சுற்றறிக்கை போலியானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, வங்கிகளின் வேலை நாட்கள் மற்றும் விடுமுறை தொடர்பாக பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி