சாதாரண குடும்பத் தகராறுகளைக் காரணம் காட்டி, ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் குற்றம் சாட்ட முடியாது என மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை தீர்ப்பளித்துள்ளது. கணவன் தற்கொலை வழக்கில் மனைவி மீதான வழக்கை ரத்து செய்த நீதிபதிகள், குடும்ப வாழ்வில் கருத்து வேறுபாடுகள் சகஜம் என்றனர். தற்கொலைக்கு நேரடியாகத் தூண்டியதற்கோ அல்லது கட்டாயப்படுத்தியதற்கோ தெளிவான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.