ஐதராபாத்தில் உயிரிழந்த பெண்ணை மீண்டும் உயிர்ப்பிக்க போவதாகக் கூறி, அவரது சடலத்தை 4 நாட்களாக வீட்டிலேயே வைத்து குடும்பத்தினர் வினோத பூஜை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்படி போலீசார், அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். மூடநம்பிக்கையால் அக்குடும்பத்தினர் செய்த இந்த செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.